ஐந்தவித்தான் - திருக்குறள் சைவப்பெருநூலேயாகும்! கிருத்தவ அமைப்புக்குத் தர்க்கரீதியான கண்டனம்!
GOSPEL RESOURCE CENTER (நற்செய்தி வள மையம்) என்னும் கிருத்தவ அமைப்பு ஐந்தவித்தான் என்னும் படம் எடுத்து, அதில் சைவசித்தாந்த நூல்களாகிய சிவஞானபோதம் முதலியனவும் திருக்குறளும் கிருத்தவ நூல்களே என்று திரிபுவாதஞ் செய்து, யூட்டியூப் காணொளி இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தனர். இக்காணொளித் திரைப்படத்தில் செய்யப்பட்டுள்ள திரிபுவாதங்களையெல்லாம் வெளிப்படுத்தி, சைவசமயத்தவர் கிருத்தவத் திரிபுரைகளைத் தெளிந்திருத்தல் வேண்டி, மறுப்புக் கட்டுரை இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும் தமிழ்நாடு புனிதர் பேரவைத் தலைவர் சிவத்திரு.செ.முருகவேள் அவர்களும் இணைந்து எழுதி, இலங்கை சைவநெறிக் கழகம் - தமிழ் நாடு புனிதர் பேரவை இணைந்த வெளியீடாக, 27 - 10 - 2024ஆம் நாள் முகநூல் முதலிய சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
































Comments
Post a Comment