Posts

Showing posts with the label 2017

இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் ஆலயத்தில் ஆண்டுதோறுமான அன்னதானப்பணி -2017

Image
2017ம் ஆண்டு மார்ச்சு மாதம் 18ம் நாள் இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டுபோன்று, இவ்வாண்டும் அன்னதானப்பணியினை ஆலயத்தின் திருவிழாவின்போது இலங்கை சைவநெறிக் கழகம்(சைவசமூகத் திருப்பணிக் கழகம்) பொறுப்பெடுத்து செவ்வனே நிறைவேற்றியது.   ஊர்மக்களுடன் நெருங்கிய பந்தம் இந்த அன்னதானத்தின் பலனாக உருவாகி, சிறப்பாகப் பேணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

புளத்சிங்கள- மிரிசேன கிராமத்தில் ஆலய அன்னதானத்திற்கு கழகத்தின் பங்களிப்பு 2017

Image
புளத்சிங்கள மிரிசேன இடத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவில் (02-04- 2017 ) அன்னதானப்பணிக்கு ரூபாய் 15,000 இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டது. அன்னதானப் பணிகளில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் அவர்களும் , சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும்  கலந்துகொண்டு அங்குள்ள மக்களோடான உறவைக் கழகத்துடன் பிணைப்பதற்குப் பணியாற்றினார்.                                                 

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017

Image
சிவராத்திரித் திருநாளில் (24-02-2017 )சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பிலுள்ள சைவாலயங்களில்  கழகத்தாரால் விநியோகிக்கப்பட்டது.