Posts

ஐந்தவித்தான் - திருக்குறள் சைவப்பெருநூலேயாகும்! கிருத்தவ அமைப்புக்குத் தர்க்கரீதியான கண்டனம்!

Image
GOSPEL RESOURCE CENTER (நற்செய்தி வள மையம்) என்னும் கிருத்தவ  அமைப்பு ஐந்தவித்தான் என்னும் படம் எடுத்து, அதில் சைவசித்தாந்த நூல்களாகிய சிவஞானபோதம் முதலியனவும் திருக்குறளும் கிருத்தவ நூல்களே என்று திரிபுவாதஞ் செய்து,   யூட்டியூப் காணொளி இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தனர். இக்காணொளித் திரைப்படத்தில் செய்யப்பட்டுள்ள திரிபுவாதங்களையெல்லாம் வெளிப்படுத்தி, சைவசமயத்தவர்  கிருத்தவத் திரிபுரைகளைத் தெளிந்திருத்தல் வேண்டி, மறுப்புக் கட்டுரை இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும் தமிழ்நாடு புனிதர் பேரவைத் தலைவர் சிவத்திரு.செ.முருகவேள் அவர்களும் இணைந்து எழுதி, இலங்கை சைவநெறிக் கழகம் - தமிழ் நாடு புனிதர் பேரவை இணைந்த வெளியீடாக, 27 - 10 - 2024ஆம் நாள் முகநூல் முதலிய சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

அரப்பலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்விப்பணி தொடக்க நிகழ்ச்சி

Image
களுத்துறை மாவட்டம் தெபுவனைப் பிரதேசம்,அரப்பலகந்த  பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் 3ஆம் ஆண்டிலிருந்து 5ஆம் ஆண்டுவரையான மாணவர்களைக் கல்வியில் மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு சனிக்கிழமையும் கற்பித்தலும் கற்பித்தலைத் தொடர்ந்து தேர்வும் என்று மாணவர் தேர்வுகளில் புலமை பெறச்செய்யும் நோக்கில் இச்செயற்றிட்டம் 05 - 10 - 2024ஆம் நாள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் தொடங்கிவைக்கப்பட்டது. இச்செயற்றிட்டமானது,  நீண்டகாலத் தேர்வுப்பயிற்சிகளினூடாகத் தேர்வுகளில் பயம் கொள்ளாது; தேர்வுகளை எதிர்கொள்ளும் உளப்பாங்குடைய மாணவர் குமுகாயத்தை இளம்பருவத்திலேயே கட்டமைக்கும் நன்னோக்கும், இளம்பருவத்திலேயே மாணவரின் கல்வித்திறனிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு, முறைப்படியான பயிற்சிகளைச் சிறப்புக்கவனம் எடுத்து வழங்குவதனூடாக, மாணவரின் சராசரித் தேர்வுப் பெறுபேறுகளை உயர்த்தும் உத்தியையும் கருத்திற் கொண்டு, இச்செயற்றிடம் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் கல்விப்பிரிவால் மிகச்சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டு, ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   ஒரு குமுகாயம் முன்னேறவேண்டும் என்றால், வெறுமனே சில மாணவரின் பெறுபேறுகளை உயர்த்துவது பலிக்காது...