Posts

Showing posts with the label 2014

கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத்தில் துண்டுப்பிரசுரங்கள் கையளித்தல் 2014

Image
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத் திருக்கோயிலுக்கு ஒருதொகைத் துண்டுப்பிரசுரம் கையளித்தல் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) உறுப்பினர்  மருத்துவர் ஆசைப்பிள்ளை சயூரதன் அவர்கள்  கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சுவரத்தில்  திருக்கோயிலுக்கு வரும் அடியாருக்குக் கையளிப்பதற்காகக் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன்  21-10-2014ஆம்  திகதியன்று ஒருதொகைத் துண்டுப்பிரசுரங்களைக் கோயிற் தொண்டரிடம் வழங்கி வைத்தார்.

கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014

Image
அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால்,  கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக் கழகமும்) பங்கு கொண்டு, தண்ணீர்ப் பந்தல் திருப்பணியை மேலும் சிறப்புற நடத்த வழிசெய்யப்பட்டது. இதன்பேறால், 2014ஆம் ஆண்டுத் தண்ணீர்ப் பந்தலில் 30 - ஜூலை - 2014ஆம் நாள்  முதன் முதல் உத்தியோகபூர்வமாக சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக் கழகமும்) இணைந்து, அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியை முன்னெடுத்தது. 

இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவி

Image
மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சார்ந்த உஜாலினி என்னும் 23 வயதுப் பெண்ணொருவருக்கு ASD Secondum என்னும் சிறு இதய துவாரப் பிரச்சினை இருந்துவந்தும் அப்பெண்ணுக்குரிய சத்திரசிக்கிச்சைக்கு சனாதிபதி செயலகத்திலிருந்து பண உதவிபெறுவதற்குதேவையான கடிதங்களை யாழ்.போதனா வைத்க்தியசாலை இதய நிபுணர் வழங்கியிருந்தும், அப்பெண்ணின் பெற்றோரால் பணச்சிக்கல்கள்,மொழிச்சிக்கல்களால் அவ்வுதவிகளைப் பெறாது இருந்தமையை அறிந்துகொண்ட கழகம்,   அப்பெண்ணின்  பெற்றோர்  கொழும்பிலுள்ள  சனாதிபதி  செயலகத்துக்கு  சென்று  குறித்த  உதவியைப்  பெற்றுக்கொள்வதற்குரிய  போக்குவரத்து,  தங்குமிடம்,  உணவு  உதவிகளை  ஏற்பாடுசெய்து  கொடுத்ததோடு,  அவர்களுக்குரிய  மொழிசார்  உதவிகளையும்  கழகத்தார்  நேரடியாக  நின்று  ஆற்றியிருந்தனர்.   இதற்குரிய செலவுகளை சைவத் தொண்டர் விவேகானந்தராஜா சரவணன் ஏற்றிருந்தார். 22-07- 2014 ஆம்  நாள்  திகதியிட்ட  கடிதம்   சனாதிபதி   செயலகத்திற்கு  வழங்கி  ...

தேவபுரம் கஜமுகன் வித்தியால பள்ளிக்கூட மாணவர்க்கு புத்தகப்பைகளை வழங்குதல்

Image
சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினரால்(இலங்கை சைவநெறிக் கழகம்) 05- 09- 2014 அன்று மட்டக்களப்பிலுள்ள முறக்கொட்டான்சேனையில் தேவபுரம் என்னும் பகுதியில் உள்ள பாலர் பாடசாலையான (ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு ஐந்துவரை) கஜமுகன் வித்தியாலத்தில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக 100 புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இப்பாடசாலையில் சைவசமூகத்தைச் சார்ந்த மீனவத்தொழிலை உடைய மக்களின் பிள்ளைகளே அதிகம் பயில்கின்றனர் என்பதையும், இம்மாணவர்கள் புத்தகப்பைகள்,காலணிகள் போன்ற வசதிகள்  குறைந்தவர்களாக உள்ளனர் என்பதையும் அறிந்துகொண்ட சைவ சமூகத் திருப்பணிக் கழகம், புத்தகப்பைகளை இலவசமாக வழங்கிடும் திருப்பணியைப் பொறுப்பெடுத்ததுடன், கழக உறுப்பினர்களே நேரடியாகச் சென்று மாணவர்களிடம் வழங்கினர். சிறுவர்களுக்குரிய சைவசமயக் கதைகளை, இந்நிகழ்வின்போது கழகத்தாரால் சிறுவர்களுக்கேற்ற பாணியில் எடுத்துச்சொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும். முறக்கொட்டாஞ்சேனை-தேவபுரம் கஜமுகன் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கிய செய்தி  battinews  இணையத்தில் வெளியாகியிருந்தது. இணையத்தளச் செய்தியைக் காண்பதற்கு இச்சொடுக்கிக்குச் செல்...

இரத்னபுர மாவட்ட ஆலய திருவிழாவில் கழகத்தாரின் அன்னதானம் 2014

Image
இரத்தினபுரி கலத்துர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2014-03-19ம் நாள் நடைபெற்ற  திருவிழாவில் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினர்(இலங்கை சைவநெறிக் கழகம்), மாகேசுவரபூசையை ஒழுங்குசெய்திருந்தனர்.மாகேசுவர பூசை என்பது திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ள அடியார்களைச் சிவமாகவே கொண்டு திருவமுது செய்து உய்வுபெறும் அருட்செயலாகும். அதாவது, மகேசுவரனாகிய சிவபெருமானைத் தம் இதயத்தில் தாங்கி நிற்கும் அடியார்கள் மாகேசுவரர் எனப்படுவர். மேற்குறித்த நிகழ்வு கனடாவில் உள்ள திரு.கஜானந் அவர்களின் நிதியுதவியில், கழக துணைச் செயலாளர்கள் திரு.கோ.இளையராஜா,திரு.சி.வினோதரூபன் ஆகியோரின் நெறிப்படுத்துகையில் நடைபெற்றது. இவ்வாலயத்தின் திருவிழாவில் அன்னதானப்பணியைப் பொறுப்பெடுப்பதற்கு தனவந்தர்கள் முன்வராமையை அறிந்துகொண்ட கழகத்தார், ஊர் மக்களோடு மக்களாக கழகமும் இவ்வாலயத்தின் திருவிழாக்கு தோள்கொடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, கழகம் அன்னதானத்தை பொறுப்பெடுத்தமை ஊர் மக்களால் பாராட்டுக்குரியதாகியது. அன்னதானத்தின்போது கழகத் தோழர்களுடன் ஊர் மக்களும் உணவு சமைக்கும் பணியில் தாமே முன்வந்து ஈடுபட்டிருந்தனர்.கழகம் ஊர்மக்களுடன் ஐக...