கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014
அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால், கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது.
இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக் கழகமும்) பங்கு கொண்டு, தண்ணீர்ப் பந்தல் திருப்பணியை மேலும் சிறப்புற நடத்த வழிசெய்யப்பட்டது. இதன்பேறால், 2014ஆம் ஆண்டுத் தண்ணீர்ப் பந்தலில் 30 - ஜூலை - 2014ஆம் நாள் முதன் முதல் உத்தியோகபூர்வமாக சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக் கழகமும்) இணைந்து, அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியை முன்னெடுத்தது.
Comments
Post a Comment