Posts

Showing posts with the label 2015

சிவராத்திரிப் பெருநாள் 2015 - உலக சைவப்பேரவை இலங்கைக் கிளையின் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றுதல்

Image
சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது.  நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும்.  எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும். 

காஞ்சி சங்கராசாரிய சுமார்த்தமதத்தாரிடம் சைவசமய அந்தணர் பயிற்சி பெறுவதா? தடுத்து நிறுத்தும் சிவப்பணி!

Image
இந்துத்துவ சுமார்த்தமத தரகர்களின் சூழ்ச்சியினால் இலங்கைப் பிரதமர் திரு.இரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பில் இலங்கை சைவாலயப் பூசகப்பிராமணர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் சைவாலய சிவாகமப் பூசைப்பயிற்சிக்கு அனுப்பிவைக்கும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகச் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனை இலங்கையில் உள்ள இந்துகுருமார் அமைப்புக்கள் சிலவும் வரவேற்று அறிக்கைகள் வெளியிட்டன. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கரமடம் சிவாகமப்பாடசாலை ஒருசில சிவாசாரியரைக் கொண்டு நடத்திவருகின்றனர். இப்பாடசாலையிலேயே இவ்வாறு இலங்கை சைவாலய அந்தணர் இலங்கை அரசால் இந்துசமய கலாசார அமைச்சினூடாக சேர்க்கும் செயற்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. காஞ்சி சங்கரமடம் என்பது சுமார்த்தமத மடம். இம்மடத்தார் சிவாகமங்களைச் சிவன் வாக்காக ஏற்பதில்லை. திருமுறை மெய்கண்ட சாத்திரங்களைச் சிவன் வாக்காக ஏற்பதில்லை. இம்மடத்தார் சைவாகமப்படி புறச்சமயத்தாரேயொழிய சைவசமயத்தார் அன்று. இம்மடத்தார் பின்பற்றும் சமயம் மாயாவாதமதம், ஏகான்மவாதமதம், சங்கரவேதாந்த மதம் என்றெல்லாம் அழைக்கப்படும் சுமார்த்தமதமாகும். இம்மதத்தார் நாவலர் காலத்தில் சிவ...

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரப்பணி 2015

Image
சிவராத்திரி அருட்திருநாளில் 17 -02- 2015ஆம் நாள் கொழும்பில் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் கோயிலில் கழகத்தால் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

திருக்கோணேசுவரத் திருத்தலத்தில் சைவசமய துண்டுப்பிரசுர விநியோகம் 2015

Image
கழக உறுப்பினர் திரு.அ.கஜந்தன், திரு.ச.தாஸ்குமார் ஆகியோர் திருக்கோணேசுவரத் திருத்தலத்திற்கு 2015- 03- 14ஆம் நாள் செல்லும்பேறு பெற்றபோது, திருக்கோயில் அடியார்களுக்கு கழகத்தின் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரத்தினை விநியோகித்தனர்.

இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் – கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!

Image
  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட “ திருமுறையும் சைவத்திருநெறியும் ” என்கின்ற சைவத்திருமுறை மாநாட்டில் இடபக்கொடிகளினால் வீதிகளும் விழா மண்டபமும் அலங்கரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது . இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு . டி . எம் . சுவாமிநாதன் அவர்கள் இந்து ஸ்வயம் சேவா சங்கம் முதலியவற்றின் ஆலோசனையினை ஏற்று அந்த அமைப்பின் இலங்கைக்குரிய கௌரவத்தலைவர் முதலிய பதவிகளில் இருந்தமையினால் , இடபக்கொடியினை பயன்படுத்துவதில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை . இடபக்கொடிக்குப் பதிலாக காவிக்கொடியினையே தூக்கிப்பிடிக்கும் செயலுக்கு துணை நிற்கலாயினார் . இச்சந்தர்ப்பத்தில் நடந்த இவ்விழாவில் , அமைச்சரின் மனதிற்கு இதமாக நடக்கவிரும்பி , இடபக்கொடிப் பாவனையினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் தவிர்த்திருந்தது . இடபக்கொடிப்பாவனையினை ( நந்திக்கொடி ) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தவிர்க்கவேண்டியிருப்பதினை சைவமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதினை அமைச்சருக்கும் திணைக்களத்திற்கும் உணர...

கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் -2015

Image
கழகத்தின் உறுப்பினர்களான சைவத்திரு. கோபால் இளையராஜா, சைவத்திரு.சி.விநோதரூபன், சைவத்திரு.இரா.இராஜ்குமார் மற்றும் அவர்தம் நண்பர்கள் பல்லாண்டு காலங்களாக அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திருப்பணி, சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) பங்களிப்புடன் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றதனைத் தொடர்ந்து, இவ்வாண்டும் 30 ஜூலை 2015ஆம் நாள் கழகத்தின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.