சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்
தமிழ்நாட்டில் சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சிவகீதை நூலினை இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கும் விழாவாகவும், சைவ விழிப்புணர்ச்சிச் சொற்பொழிவுகள் அடங்கிய சிவநெறி அரங்கு விழாவாகவும் சைவம் பேணுவோம் விழா, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 20 – 12 – 2022ஆம் நாளன்று இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டது. சைவசமயத்திலும் கீதை என்னும் நூல் உண்டு என்பது குறித்த விழிப்புணர்வையும், ஏராளமான கீதைகள் உள்ளன என்பதனையும் சைவத்தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் என்பதன்பொருட்டுத் தமிழ்நாட்டில் இருந்து, சிவகீதை நூல் இலங்கைக்குப் பெறப்பட்டு, அறிமுகவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. தென்னாடு ஐம்பூதநாதர் திருக்கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் இணைந்து பங்கேற்றுப் பேருதவி புரிந்தனர். தமிழ்நாட்டுத் தருமைபுர ஆதீனத் தம்பிரான் தவத்திரு மீனாட்சி சுந்தரம் தம்பிரான் சுவாமிகள் இவ்விழாவிற்கு எழுந்தருளியிருந்தார். சைவத்திருமதி சித்தாந்தரத்தினம் செ.உதயகௌரி அவர்கள் சபையை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். குமாரவயலூர் திருமுறைக்கலாநிதி முனைவர் திருஞான பாலச்சந்...