Posts

Showing posts with the label 2020

சிவராத்திரிப் பெருநாள் சைவ விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரம் 2020

Image
கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் திருக்கோயிலில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் சிவராத்திரிப்பெருநாளை (21-02-2020) முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்டது.

ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்

Image
ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே,  பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச சபைக்குக் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டது. சமூக ஊடகங்களிலும்பொது ஊடகங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  இந்நடவடிக்கையைக் கைவிடுவதாக ஊர்க்காவற்றுறை பிரதேச சபை அறிவித்ததுடன், இலங்கை சைவநெறிக் கழகத்திற்கும் தெளிவூட்டற் கடிதத்தை அனுப்பிவைத்திருந்தனர். 

சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரை

Image
  மொரட்டுவை-இரத்மலானை(சொய்சாப்புர) அறிவொளி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவிற்கு  (2020-02-02) முதன்மை விருந்தினராக இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில், ' 'அறநெறிக் கல்வியின் தேவையை நம்சமூகம் நன்கு உணர்ந்தில்லை'' என்னும் கருப்பொருளில் முதன்மை உரையை ஆற்றினார்.

வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு

Image
வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில் "சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம வழிபாடு" என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி - கழகத் தலைவரின் கட்டுரை

Image
அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி  கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.  

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு

Image
மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் கலாபூஷணம்  சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன்  பெருமகனாரின் நெறிப்படுத்தலில், தமது திருக்கோயிலின் பெருந்திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்துவருவதனை வழக்காகக் கொண்டுள்ளனர். இதன்பயனாகத் திருவிழாவில்(27-02-2020)  இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்  "சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே"  என்னும் கருப்பொருளில்,  சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்கள்.  இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள், பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் ஆகியோருடன் ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியம்மன் அருளினைப் பணியும்பேறும் இச்சொற்பொழிவுப் பயணத்தால் அமையப்பெற்றது.

மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்

Image
மாத்தளை மாநகரில் அமையப்பெற்றுள்ள மகாத்மா காந்தி நினைவாலய நூலகத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீடுகளான சைவத்தின் கதை-அலகிலா ஆடல், சிவப்பிரகாசக்கதவம், சைவம் போற்றுதும் நூல்கள், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு. சி. வினோதரூபன் அவர்கள் வழங்கி வைக்கும் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள். விடைக்கொடிச் செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள் உடனுள்ளார்கள். 

இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி

Image
இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது.

கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை

Image
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடல்களினைத் தடைசெய்தபோது மக்களிடம் கோயில் திருவிழாக்களினை நடத்துதல் குறித்து குழப்பங்கள் எழும்பியபோது, இலங்கை அரசாங்கத்தின் செயல், மருத்துவ விஞ்ஞான பூர்வமானதென்பதினால் சைவமக்கள் அதனை மதித்தொழுக வேண்டும் என்பதுடன், சிவாகமங்கள் நாட்டில் அபாயங்கள் எழும்போது ஆலயப்பூசைகள் விழாக்கள் தடைப்படுவதினை ஏற்று அருள்வதினைச் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை.

தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு

Image
தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 - 12 - 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார்.

மார்கழிப் பெருவிழா பெரியபுராண பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கை சைவநெறிக் கழகம்

Image
தமிழ்நாடு சைவசித்தாந்தப் பெருமன்றம் பல்வேறு அமைப்புக்களினையும் இணைத்து ஏற்பாடு செய்த மார்கழிப் பெருவிழா பெரியபுராண பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கை சைவநெறிக் கழகமும் கலந்துகொண்டதுடன், ''நாவலர் வழி பெரியபுராணமும் சைவ மதிப்பீடுகளும்'' என்னும் தலைப்பில் (2021-01-02), கழகத் தலைவர் மருத்துவர் ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தியிருந்தார்.

இரத்மலானை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சைவசமய தீக்கை ஏற்பாடு

Image
செம்டெம்பர் மாதம் 14ம் திகதி இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தினுடனும் இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரி - இரத்மலானையில் விளங்கும் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சிவத்திரு.மகாலிங்கக்குருக்கள் பெருமகனாரினை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைப்பித்து சைவசமய தீக்கை வழங்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.

மாணிக்கவாசகர் பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்- 2020

Image
26 - 06 - 2020ஆம் நாளன்று மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறி கழகத்தினால், ஹேகிட்டிய வத்தளை முருகன் திருக்கோயிலில் மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையினையும் திருவாசக முற்றோதலும் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வினை சமயப்பிரிவுக்குப் பொறுப்பான இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் திருமதி உதயகௌரி அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது.

இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் அன்னதானப் பணி 2020

Image
இரத்தினபுரி கலத்துர தோட்ட முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் வழமைபோன்று இவ்வாண்டும்  இலங்கை சைவநெறிக் கழகம் அன்னதானப் பணியினை ஏற்று நடத்தினர்.