Posts

Showing posts with the label 2018

மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழா

Image
அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் - சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29-12-2018 அன்று மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு விருந்தினர்களான கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும், கிழக்குபல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை தலைவர் கலாநிதி சாந்தி கேசவன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்ற பிரதித்தலைவர் விடைக்கொடிச் செல்வர் திரு.சி.தனபாலா அவர்கள் கலந்து சிறப்பித்தார். இலங்கை சைவநெறிக் கழக தலைவர் மருத்துவர் கி.பிரதாபன் அவர்களின் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமான இந்நிகழ்வில் அறிமுகவுரையை மூத்த...

அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் விமர்சனக் கட்டுரை

Image
இலங்கை சைவநெறிக் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு. வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் குறித்து பத்திரிக்கையில் வந்த நூல் விமர்சனக் கட்டுரை

அலகிலா ஆடல்,சிவப்பிரகாசக் கதவம் – கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழா

Image
கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூலும், சித்தாந்தரத்தினம் திரு.ந.சிவபாலகணேசன் அவர்கள் எழுதிய சிவப்பிரகாசக்கதவம் நூலும் இலங்கை சைவநெறிக் கழகத்தால் 20- 10 – 2018ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. இவ்வெளியீட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக பேராசிரியர் சி.பத்மநாபன் அவர்களும், திருவருள்மிகு விருந்தினர்களாக சிவத்திரு.கு.வை.க. வைத்தீஸ்வரக் குருக்கள், சிவத்திரு.சு.சிவராமக்கிருஷ்ணக் குருக்கள், சித்தாந்தச்செம்மல் சிவத்திரு. ஈசான சொர்ணலிங்க தேசிகர் முதலியோரும், பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.மா.தவயோகராஜா,அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.வே.கந்தசாமி,அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொருளாளர் திருமதி அபிராமி கயிலாசப்பிள்ளை அம்மையார், திரு.மா.கோ.காண்டீபன் (கணக்காளர் – இந்து சமய கலாச்சாரத் திணைக்களம்), இந்து சமயக் கலாச்சாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.இ.கர்ஜீன், சித்தாந்தச் செம்மணி திரு.செல்.நவநீதகுமார்,திருமுறைச்செல்வர் திரு.கந்தையா ஜெகத...