மண்கும்பான் வெள்ளைப்புற்றடி அருள்மிகு வீரகத்தி விநாயகர் திருக்கோயிலில் சமயதீக்கை
யாழ்ப்பாணம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி அருள்மிகு வீரகத்தி விநாயகர் திருக்கோயிலில் 10-09- 2024ஆம் நாள் சமயதீக்கைச் சிவப்புண்ணியத் திருப்பணி இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. சிவத்திரு.கிருஷ்ண ஜனேந்திரக் குருக்கள் தீக்கைக்குருவாக விளங்கி, சமயதீக்கைக் கிரியைகளைச் செவ்வனே திருவருட்சம்மதத்தில் அழுந்திநின்று நடத்தியருளினார். இக்கிரியைகளில் சிவத்திரு வாமதேவ சிவசதீபன் சிவம் அவர்களும் கலந்து கிரியைகளில் உடனுதவிச் சிறப்பித்தார்கள். சமயதீக்கை பெற்றுக்கொள்வதன் சிறப்பினை கழகத் தலைவர் ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் எடுத்து விளக்கிச் சொற்பொழிவாற்றினார். கலந்துகொண்ட அன்பர் அனைவருக்கும் பஞ்சபாத்திரம் உத்தரணி தட்டம் நாவலர்பெருமான் எழுதியருளிய நித்திய கரும விதி நூல், இல்லங்களில் சிவபூசை செய்வோம் நூல் என்பன சிவாசாரியப்பெருமகனாரின் திருக்கரங்களினால் வழங்கியருளப்பட்டது.



















Comments
Post a Comment