நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்
நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் ஊரவர்களுக்கும் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும் வழங்கும் நிகழ்வு
மலையகத்தில் நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் நவநாதச்சித்தர் பெருமானின் சமாதி விளங்கும் சிவாலயத்தில், 29ம் திகதி ஜூலை மாதம் 2023 நாளன்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை 415 பேருக்கு
சைவசமயதீக்கை வழங்கும் சிவப்பணி இனிதே நடைபெற்றது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில், இலங்கை சைவநெறிக் கழகத்தின் நெறிப்படுத்தலில், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம், சைவ முன்னேற்றச் சங்கம்- பிரித்தானியா, ஆத்மஜோதி முத்தையாசுவாமிகள் சைவசமயத் தொண்டர் சபை, கனடா சைவநெறித் தொண்டர் கழகம்,இலங்கை சைவநெறித் தொண்டர் கழகம் என்பவற்றின் இணை அனுசரணையோடு, சமயதீக்கை வழங்கும் சிவப்பணி நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் சிவாகமபீடத்தின் சிவாச்சாரியப்பெருமகனார், சிவஸ்ரீ. கிருஷ்ண ஜனேந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவஸ்ரீ ந.வர்ணதேவக்குருக்கள் (அச்சுவேலி- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.நா.சிவதர்ஷக்குருக்கள் (நல்லூர்- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.கிருஷ்ண ஹரிகரன் ஐயர் (சிவாகம பீடம்- நல்லூர்) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு சமயதீக்கை கிரி யைகளினை சிறப்புற சிவாகமவிதிப்படி நிகழ்த்தியருளினர்.
சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு சைவசமய அனுட்டானப்புத்தகமும் பஞ்சபாத்திரம் உத்தரணி சிறுதட்டம் என்பனவும், அன்புமார்க்க சிவபூசையின் பொருட்டு சிவலிங்கமும் வழங்கப்பட்டது. மேலும் அன்புமார்க்கமாக இல்லங்களில் சிவபூசையினை மேற்கொள்வதற்கு வசதியாக, ''இல்லங்களில் சிவபூசை செய்வோம்'' என்னும் இலங்கை சைவநெறிக் கழகத்தின் நூலும் சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு வழங்கப்பட்டது. 415 பேர் சமயதீக்கை பெற்றபோதும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒன்றெனும் வீதத்தில் 351 பேருக்கு
இவ்வாறு வழங்கப்பட்டது. ஏறத்தாழ 700 பேர் அன்னதானத்தில் கலந்துகொண்டனர். அவர்களில் அறநெறி ஆசிரியர்களினையும் பிள்ளைகளினையும்
ஒருங்கிணைத்து, ''மாகேசுவரபூசை'' மரபான முறையில் செய்வது எப்படி என்னும் விளக்கத்தோடு போதிக்கப்பட்டு, அவர்களினை மாகேசுவரர்களாகப் பாவித்து மாகேசுவரபூசையும் செய்யப்பட்டது.
காலை 10.30 மணி தொடக்கம் சைவ அனுட்டானம், அன்புமார்க்கச் சிவபூசை என்பவற்றினை சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு குழுக்குழுவாகப் பிரித்து, மரு.ஈசான தேசிகர்.கி.பிரதாபன் அவர்கள் செய்துகாட்டி பயிற்சியும் விளக்கமும் வழங்கினார். இவ்வாறு மாலை 4.30 மணிவரை தொடர்ச்சியாக சமயதீக்கை பெற்றுக்கொண்டோர் அனைவருக்கும் சைவசமய சைவ அனுட்டானமும் அன்புமார்க்க சிவபூசையும் பயிற்றுவிக்கப்பட்டது. சமயதீக்கை பெற்றுக்கொண்டோர் அனைவரும் பொறுமையாக விருப்பத்தோடு பழகிக் கொண்டனர். சைவ அனுட்டானப் புத்தகங்கள் நல்லூர் சிவாகமபீடத்தினாலும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினாலும் வழங்கப்பட்டது. நாவலர்பெருமான் அருளிய சுருக்க சைவ அனுட்டானமாகிய ''நித்திய கரும விதி'' என்னும் நூலே சைவ அனுட்டான நூலாக வழங்கப்பட்டது. கொழும்பு விவேகானந்த சபையினால் வழங்கப்பட்ட சைவபோதினி நூல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட ''இல்லங்களில் சிவபூசை செய்வோம்'' நூலும் சைவசமய தீக்கை பெற்றுக்கொண்டோருக்கு, இல்லங்களில் சிவபெருமானை வழிபட்டுச் சிறக்கும்பொருட்டு வழங்கி வைக்கப்பட்டது.
குயின்ஸ்பெரித் தோட்ட நவநாதச்சித்தர் சிவாலயத்தின் அறங்காவலர் சபையும் ஊர் மக்களும் வழங்கிய ஆதரவு போற்றுதலுக்குரியது. ஊர் மக்களும் அறங்காவலரும் நிதியுதவி அளித்து இவ்வளவு பெரிய சிவப்பணியினை முன்னெடுத்த அத்தனை அமைப்புக்களுக்கும் நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.
அறங்காவலர் சபை உறுப்பினர்களும் சமயதீக்கை பெற்றுக்கொண்டதோடு, சைவசமய அனுட்டானத்தினையும் அன்புமார்க்க சிவபூசையினையும் விருப்போடு பழகிக் கொண்டனர்.







































































.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment