சிவயோகர்சுவாமிகளின் 60ஆவது ஆண்டுக் குருபூசை-நற்சிந்தனை போற்றுதும்
சிவயோகர்சுவாமிகளின் 60ஆவது ஆண்டுக் குருபூசையை முன்னிட்டு சைவப்பெருஞ்சமயச் செந்நெறி வளர்க்கும் ‘’நற்சிந்தனை போற்றுதும்’’ அரங்கு , இலங்கை சைவநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் , 21-03-2024ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்குத் தொடங்கி 8.30 மணிவரைச் சிறப்புடன் நடைபெற்றது. சிவயோகர்சுவாமிகளுக்குரிய குருபூசையினை இலங்கை சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர் முன்னின்று நடத்தி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். இந்நிகழ்வில் கொழும்பு சாந்த கிளேயர் மகளிர் மகா வித்தியாலயம், கொழும்பு குமார உதயம் தமிழ் மகாவித்தியாலயம்,வெள்ளவத்தை இராமகிருஷ்ண மகாவித்தியாலயம் - பாமன்கடை, நுகேகொட தமிழ் மகாவித்தியாலயம், தெகிவளைத் தமிழ் மகாவித்தியாலயம், கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை, வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயம்,பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி என்பவற்றைச் சேர்ந்த மாணவர் கலந்து கொண்டனர். இம்மாணவர்களுடைய பண்ணிசை, நடனம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், இம்மாணவர்களுக்கு சைவசமயத்தில் உடனடிப் பல்தேர்வு வினாத்தாள் பரீட்சை நடத்திப் பரிசில்களும் வழங்கப்பட்டது. இப்பரிசில்கள் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட நூல்களையும் உள்ளடங்கி வழங்கப்பட்டது.
வந்திருந்த மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏனைய சபையோருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. உடனடிப் பல்தேர்வு வினாத்தாள் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கபப்ட்டன. ஏறத்தாழ 150 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தன்ர்.






Comments
Post a Comment