சமயதீக்கை வழங்கும் அருட்பணி - 2024

இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சமயதீக்கை வழங்கும் அருட்பணி 08 -03- 2024 ஆம் நாளாகிய மகாசிவராத்திரித் திருநாளில்  நடத்தத் திருவருள் கூடியிருந்தது. இதன்போது, இலங்கை சைவநெறிக் கழகத்தின்  சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர்  (68 மாணவர்) சைவசமயத்தீக்கை பெற்றுக்கொண்டு,  சிறப்புச் சைவசமயியாயினர்.மேலும் பல மூத்தோர் இச்சமயம் சமயதீக்கை பெற்றுக்கொண்டனர். தீக்கை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட ''இல்லங்களில் சிவபூசை செய்வோம்'' நூலும், பஞ்சபாத்திரம்,தட்டம், உத்தரணி, நாவலர்பெருமானின் நித்திய கருமவிதி நூலும் சைவ அநுட்டானத்தின்பொருட்டு வழங்கப்பட்டது. மேலும், அன்புமார்க்கச் சிவபூசையை மாணவர் மேற்கொள்ளும்பொருட்டுச் சிவலிங்கங்களும் வழங்கப்படத் திருவருள் கூடியிருந்தது. 








Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்