❤️❤️❤️சொய்சாப்புரத்தில் சிவத்தமிழ்க் கலைவிழா -2023 ❤️❤️❤️

சிவத்தமிழ்க் கலைவிழா - இலங்கை சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் முத்தமிழ் பொங்கும் சிவத்தமிழ்க் கலைவிழாவானது 05-11-2023ஆம் நாள், காலை 9.30 மணிக்குத் தொடங்கி வெகுசிறப்பாகச் சொய்சாப்புரம் பொது மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இக்கலைவிழாவின் பொருட்டுப் பேச்சுப்போட்டி, வினாத்தாள் தேர்வுப்போட்டி என்பவற்றுடன் கோலப்போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில்  சித்திபெற்ற மாணவருக்குச் சிறப்புப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், அனைத்து மாணவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

















ஒட்டுறுப்பு அறுவை மருத்துவ (பிளாஸ்டிக் அறுவைமருத்துவ) நிபுணர் க.இளஞ்செழியபல்லவன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சைவத்திருமதி அபிராமி கயிலாசபிள்ளை அம்மையார்,  சித்தாந்தச்செம்மல் சிவத்திரு.ஈசான சொர்ணலிங்கம் தேசிகர், சைவசித்தாந்த முதுகலைமாணி சிவத்திரு.ந.சிவபாலகணேசன் பெருமகனார், கலாபூஷணம் சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன் தம்பதியர்,  சைவப்புலவர் சைவத்திரு. மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்கள்  பீடுடைவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர் கி.பிரதாபன் அவர்களின் தலைமையில் இவ்விழா இனிதே  நடைபெற்றது.
                                                                                         

































































































































































































































































Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்