நாவலர் விழா - 2022
நாவலர்பெருமானின் 200ஆவது ஆண்டு உதித்த நன்னாளினைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விண்ணப்பத்திற்கு ஏற்ப, நாவலர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகள் நாவலர்பெருமானைச் சிறப்பிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் அங்கமாக, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் ஏற்பாட்டில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, இலங்கைச் சைவநெறிக் கழகம் அடங்கலாகப் பல்வேறு சைவ அமைப்புக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, நாவலர்பெருமான் குருபூசையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 31ஆம் நாள் (31- 12 - 2022) சனிக்கிழமை காலையில் கொழும்பு சம்மாங்கோட்டுப் பிள்ளையார் திருக்கோயிலில் இருந்து ஊர்வலத்துடன் தொடங்கி, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடனும் சைவசமயப் பொது அறிவுத் தேர்வுப்போட்டிகளுடனும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத்துறையின் மூத்தவிரிவுரையாளர் சைவத்திரு.தி.செல்வமனோகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். முதன்மை விருந்தினராக உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு சி.துரைராஜா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.



Comments
Post a Comment