சிவபூசை - நூல்களும் காணொளிகளும்
சிவபூசை இருவகைப்படும். ஒன்று ஆன்மார்த்த சிவபூசை. மற்றையது பரார்த்த சிவபூசை. ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் தானே, தன்பொருட்டுச் செய்துகொள்வதாகும். பரார்த்த சிவபூசை என்பது நாட்டின் நலன்பொருட்டும் உலகத்தார் நலன்பொருட்டும் செய்யும் பூசையாகும். ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் செய்துகொள்ளவேண்டியவொன்றாகும். இது இருவகைப்படும். ஒன்று சிவாகமவழி விசேடத் தீக்கைகளுடன் செய்துகொள்ளும் ஆன்மார்த்த சிவபூசை. இப்பூசை சிறப்பு ஆன்மார்த்த சிவபூசை என்று போற்றுதற்குரியது. மற்றையது, அன்புமார்க்கமாய்ச் செய்யும் சிவபூசையாகும். இது பொது ஆன்மார்த்த சிவபூசை என்று பாராட்டுக்குரியது. எறும்பு, யானை, சிலந்தி, ஈ, காகம், குரங்கு என்று சிவபெருமானை இவ்வகையிற் வழிபட்டு உய்வடைந்த சைவப்புராணச்செய்திகள் ஏராளம். இவ்வாறு, விலங்குகளே பூசைசெய்து சிவபெருமானின் அருளைப் பெற்றுய்ந்துள்ளபோது, பிறத்தற்கரிய மானிடப்பிறவியிற் அடைதற்கரிய அரும்பேறாகிய சைவசமயத்தினைச் சார்ந்த சைவமக்கள், சிவபூசையினைக் கைக்கொள்ளாவிட்டால், எடுத்த பிறப்பை வீணாக்கியதாகவே முடிய...
Comments
Post a Comment