2018ஆம் ஆண்டு சைவம் போற்றுதும் விழாவில் சைவம் போற்றுதும் நூல் வெளியீடு

சைவநெறிக் கற்போடு தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்திடும் திருவிழாவாக, முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட “சைவம் போற்றுதும்” விழாவின்போது (04 – 07 – 2018) விழாவினைச் சிறப்பிக்குமாறு, “சைவம் போற்றுதும்” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை சிவத்திரு.கு.வை.க.வைத்தீசுவரக்குருக்கள் வெளியிட்டுவைக்க, முதற்பிரதியினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகை அதிபர் திரு.திருமதி.அ.பி.ஜெயராஜா தம்பதியர் பெற்றுக்கொண்டனர்.

சைவசமயம்,சைவசமயத்தில் வழிபடு கடவுள், சைவ சமய நூல்கள், விடைக்கொடி என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளுடன், சிவபூமிச் சைவமுதலிகள், தேசிகர், தாதையர் வரலாறுகளையும், கழகத்தினால் சைவம்போற்றுதும் விழாவிற் விருதுவழங்கப்பட்ட சைவச்சான்றோர் பற்றிய சிறுகுறிப்புக்களையும் தொகுத்து அமைக்கப்பட்ட நூல் இதுவாகும்.
                   

கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் (சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) , பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாகவும், நூல்நெறியாள்கை ஆசிரியராக கழகத்தின் பிரதித் தலைவர் திரு.கோ.இளையராஜா அவர்களும் பணியாற்றி, உருவாக்கிய நூல் இதுவாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017

சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013