2018 ஆம் ஆண்டுச் சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சிவராத்திரித் திருநாளில் (13-02-2018) சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் அடியாரிடத்தே விநியோகிக்கப்பட்டது.
சிவபூசை இருவகைப்படும். ஒன்று ஆன்மார்த்த சிவபூசை. மற்றையது பரார்த்த சிவபூசை. ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் தானே, தன்பொருட்டுச் செய்துகொள்வதாகும். பரார்த்த சிவபூசை என்பது நாட்டின் நலன்பொருட்டும் உலகத்தார் நலன்பொருட்டும் செய்யும் பூசையாகும். ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் செய்துகொள்ளவேண்டியவொன்றாகும். இது இருவகைப்படும். ஒன்று சிவாகமவழி விசேடத் தீக்கைகளுடன் செய்துகொள்ளும் ஆன்மார்த்த சிவபூசை. இப்பூசை சிறப்பு ஆன்மார்த்த சிவபூசை என்று போற்றுதற்குரியது. மற்றையது, அன்புமார்க்கமாய்ச் செய்யும் சிவபூசையாகும். இது பொது ஆன்மார்த்த சிவபூசை என்று பாராட்டுக்குரியது. எறும்பு, யானை, சிலந்தி, ஈ, காகம், குரங்கு என்று சிவபெருமானை இவ்வகையிற் வழிபட்டு உய்வடைந்த சைவப்புராணச்செய்திகள் ஏராளம். இவ்வாறு, விலங்குகளே பூசைசெய்து சிவபெருமானின் அருளைப் பெற்றுய்ந்துள்ளபோது, பிறத்தற்கரிய மானிடப்பிறவியிற் அடைதற்கரிய அரும்பேறாகிய சைவசமயத்தினைச் சார்ந்த சைவமக்கள், சிவபூசையினைக் கைக்கொள்ளாவிட்டால், எடுத்த பிறப்பை வீணாக்கியதாகவே முடிய...
05 - 08 - 2013ஆம் நாளன்று மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிச் சைவசமய மக்களிடம் சைவசமய விழிப்புணர்வை உருவாக்குவது ஆக்கபூர்வமானதாக அமையும் என்னும் கழகச் சிந்தனைக்கு அமைவாகவும், நாவலர்பெருமானின் உத்திக்கு ஏற்பவும் துண்டுப்பிரசுரப்பணி சைவாலயத் திருவிழாக்களின்போது கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Comments
Post a Comment