சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013

 05 - 08 - 2013ஆம் நாளன்று  மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 



அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

 

தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.





நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம்
கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது.


சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிச் சைவசமய மக்களிடம் சைவசமய விழிப்புணர்வை உருவாக்குவது ஆக்கபூர்வமானதாக அமையும் என்னும் கழகச் சிந்தனைக்கு அமைவாகவும், நாவலர்பெருமானின் உத்திக்கு ஏற்பவும் துண்டுப்பிரசுரப்பணி சைவாலயத் திருவிழாக்களின்போது கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017