Posts

சிவராத்திரிப் பெருநாள் 2015 - உலக சைவப்பேரவை இலங்கைக் கிளையின் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றுதல்

Image
சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது.  நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும்.  எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும். 

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

Image
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 - 11 -  2021ஆம் நாளன்று  மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக்  கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது.

களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் சுவர் ஓவியந்தீட்டப்படுதற்குரிய அனுசரணை வழங்குதல்

Image
களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் வகுப்பறைச் சுவர்களில் பாடத்திட்டத்துக்கு துணையாக விளங்கக்கூடிய சித்திரங்கள் வரைவதற்குரிய நிதித்தொகை 12,000 ரூபாய் இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரன் பெருமகனார் சிவபதப்பேறுக் கடிதம்

Image
சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் சிவபதம் பெற்றதும் அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையோடு இணைந்து, சிவபதப்பேறுக் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இலங்கைச் சைவப்பெருமக்களின் நன்றியுணர்வையும் சேக்கிழார் அடிப்பொடிப் பெருமகனார்பால் இலங்கைச் சைவப்பெருமக்கள் கொண்டுள்ள பற்றையும் தெரிவித்துக்கொள்ளக்கூடியதாகவிருந்தது. 

கார்த்திகைத் தீபத்திருவிழாவும் முதலாவது மரநடுகைத்திட்டச் செயற்பாடும் 2021

Image
கொழும்பு இந்துக் கல்லூரி கற்பக விநாயகர் திருக்கோயிலில் 18 - 11 - 2021ம் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள் திருவிழா, இலங்கை சைவநெறிக் கழகத்தின் நிதி அனுசரணையுடன் சிறப்புற நடைபெற்றது. அத்தோடு வில்வமரம், விளா வேம்பு முதலிய மரங்களும் பாடசாலைச் சூழலில் வளர்க்கும் முகமாக, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் முதலாவது மரநடுகைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.